Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் புதிய அணிகள்: அக்டோபர் 25ல் அறிவிப்பு!

Advertiesment
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் புதிய அணிகள்: அக்டோபர் 25ல் அறிவிப்பு!
, புதன், 29 செப்டம்பர் 2021 (08:24 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 2 புதிய அணிகள் இணைக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் புதிய அணிகள் குறித்த விபரங்களை அக்டோபர் 25-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது 8 அணிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, பெங்களூரு, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய 8 அணிகள் தற்போது விளையாடி வருகின்றன
 
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் 2 புதிய அணிகளை இணைப்பது குறித்து பிசிசிஐ முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தது. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சேர்க்கப்பட உள்ள புதிய இரண்டு அணிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்டோபர் 25-ஆம் தேதி பிசிசிஐ வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த 2 புதிய அணிகள் எவை எவை என்பதை தெரிந்துகொள்ள ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் கிரிக்கெட்: இன்று பெங்களூரு-ராஜஸ்தான் மோதல்!