Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி வங்கிகளில் பணம் ஆட்டோ டெபிட் ஆகாது..! – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள்!

Advertiesment
National
, புதன், 29 செப்டம்பர் 2021 (09:49 IST)
வங்கிகளில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆட்டோ டெபிட் செய்வதற்கான நடைமுறைகளில் ரிசர்வ் வங்கி மாற்றங்கள் செய்துள்ளது.

வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தும் நிலையில் ஓடிடி தளங்கள், செல்போன் மற்றும் இதர பல சேவைகளுக்கு கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலும் கிரெடிட் கார்டு தகவல்களை தந்துவிட்டால் மாதாமாதம் பணம் ஆட்டோமேட்டிக்காக எடுத்துக் கொள்ளப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைப்படி ரூ.5 ஆயிரத்திற்குட்பட்ட ஆட்டோ டெபிட் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஓடிபி வழியாக அனுமதி கேட்கப்படும். வாடிக்கையாளர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அந்த பணம் டெபிட் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் இன்று குறைந்தது தங்கம் விலை!