Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை! முதல்வரின் விபரீத முடிவால் ஏற்பட்ட விளைவா?

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (07:44 IST)
தெலுங்கானா மாநிலத்தில் அண்மையில் இண்டர்மீடியட் தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 9 லட்சத்து 74 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் இந்த தேர்வில்  3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. 
 
இந்த ஆண்டு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியை தனியார் நிறுவனத்திற்கு முதல்வர் கொடுத்ததே இந்த நிலைமைக்கு காரணம் என கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களில் இதுவரை 19 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள தெலுங்கானா அரசு, தோல்வி அடைந்த மாணவர்களின் விடைத்தாள்களை எந்தவித கட்டணமும் இன்றி மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டுள்ளது.
 
தோல்வி அடைந்த மாணவர்கள் மட்டுமின்றி வெற்றி பெற்ற சில மாணவர்களும் மதிப்பெண் குறைவாக இருந்ததால் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி 1000க்கு 847 மதிப்பெண்கள் எடுத்தும் தான் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இதுகுறித்து முதல்வர் சந்திரசேகரராவ் கூறியபோது, 'தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்க்கையில் இன்னும் நிறைய உள்ளது. தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டமானது. வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமானது. உங்களுக்காக இன்னும் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றது. உங்களுடைய தற்கொலை உங்கள் பெற்றோர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிடும். எனவே சிந்தித்து செயல்படுங்கள்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments