Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலாவதியான மருந்தை கரும்பூஞ்சை மருந்து என விற்ற கும்பல் கைது!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (17:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கரும்பூஞ்சை நோய்களிலும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதும் அதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் கரும்பூஞ்சை நோய்க்கான மருந்துகளும் மத்திய அரசால் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கரும்பூஞ்சை மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்ற கும்பலை போலீசார் மடக்கி பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
டெல்லியில் கரும்பூஞ்சை நோய்க்கான மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்ற டாக்டர் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் சிக்கியுள்ளது. அவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். காலாவதியான ஆம்போடெரிசின்  மருந்துகளை டாசோபேக்டம் மருந்து குப்பிகளில் மாற்றி விற்றது அம்பலமாகியுள்ளது.
 
கரும்பூஞ்சை மருந்து எனக் கூறி மோசடியாக விற்ற உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அல்டமாஸ் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்/ டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த கும்பல் பதுங்கியிருந்த  3000 போலி கரும்பூஞ்சை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன,
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments