Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சியில் அநீதிக்கே இடமில்லை - நிதின் கட்கரி!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (09:46 IST)
பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
 
மத்திய அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஹரியானா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.  
 
விவசாயிகள் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தற்போது தீவிரமாக வலுத்து வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக  உண்ணாவிரத போராட்டத்தையும் கையில் எடுத்துள்ளனர். 
 
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக அரசு விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது, அவர்களின் பரிந்துரைகளை ஏற்க தயராக உள்ளது. பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments