Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக தொண்டர் ஸ்டாலினுக்கு நன்றி! ஏன் தெரியுமா?

Advertiesment
அதிமுக தொண்டர் ஸ்டாலினுக்கு நன்றி! ஏன் தெரியுமா?
, சனி, 2 மே 2020 (10:00 IST)
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவக் கூடிய வகையில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை திமுக அறிவித்து செயல்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்வது போல தன்னார்வலர்களும் உதவி செய்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக தமிழக எதிர்க்கட்சியான திமுகவும் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் பலன்பெற்ற அதிமுக தொண்டர் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘ கு.தங்கராஜ் ஆகிய நான் மரியாதையுடனும், வணக்கத்துடனும் எழுதிய வாழ்த்து மடல். தாங்கள் செய்த வா ஒன்றிணைவோம் என்ற திட்டத்தில் பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவன். நான் ஒரு அதிமுக உறுப்பினர். ஆனால், தற்போது அதை சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த அரசு மக்கள் கஷ்டப்படும்போது கை கொடுக்க முடியாத அரசாக உள்ளது.

நீங்கள் கூறிய 5000 ரூபாய் திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. இந்த கட்சியில் இருந்ததற்காக வெட்கப்பட்டு, உறுப்பினர் அட்டையை கிழித்து விட்டேன். இனி என் வழி தளபதி வழியாக. ஈரோடு மாவட்டச் செயலாளர் அவர்களின் கீழ் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு தங்களின் அனுமதியும் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை சமூக வலைதளங்களில் திமுகவினரால் பகிரப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மண்டையில் தபலா வாசிக்கும் நீலிமா ராணி - ட்ரண்டாகும் அசத்தல் டிக்டாக் வீடியோ!