இந்திய நாடு பல்வேறு சிறப்புகளுடன் திகழும் நாடு என்பது நாமறிந்ததுதான். பல்வேறு மொழி, இன மக்களை ஒருங்கே கொண்டு வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் நாட்டின் சில சிறப்புகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுவர் ராஜா ராம் மோகன் ராய்.
இந்தியாவின் ஆபரணம் என்று அழைக்கப்படுபவர் நேரு.
இந்தியாவின் கிளி என்று அழைக்கப்படுபவர் அமிர்குஸ்ரு.
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் சரோஜினி நாயுடு.
இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்படுபவர் காளிதாசர்.
இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர் வல்லபாய் படேல்.
உலகிலேயே மிகப்பெரிய அளவில் வைரத்தை பட்டை தீட்டுவது இந்தியாவில்தான்.
உலகில் உற்பத்தி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை இந்தியர்கள்தான் பயன்படுத்துகின்றனர்.
சிமெண்ட் தயாரிப்பில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது இந்தியா.
பீகார் மாநிலத்தில் உள்ள பெட்லா தேசிய பூங்காதான் இந்தியாவின் மிகப்பெரிய பூங்கா.
இந்தியாவில் இருக்கும் மொத்த கிராமங்களின் எண்ணிக்கை 6,40,000.
மேலும் இந்தியாவின் சிறப்பு என்று நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். எழுதுங்கள்.