பெண்கள் மெனோபாஸ் காலத்தில் அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு, உறவுக்குப் பிறகு ரத்தப் போக்கு, வெள்ளைப்படும் போது அதில் துர்நாற்றம் என ஏதாவது ஒரு அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பாப் டெஸ்ட் மற்றும் பயாப்சி மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்கியிருக்கிறதா என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை உடனடியாக துவக்க வேண்டும்.
ஒரு வேளை புற்றுநோய்க்கான அறிகுறி இருந்தால், புற்றுநோயின் நிலையைப் பொறுத்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரம்ப நிலையில் இருந்தால் கிரையோ என்ற சிகிச்சை மூலம் வைரஸ் கிருமிகள் மேல் செலுத்தி அதை முற்றிலுமாக அழிக்கலாம். அல்லது கர்ப்பப்பையை நீக்கி ரேடியோ தெரபி சிகிச்சை கொடுக்கலாம்.
எனவே இந்த வகை புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்து முற்றிலும் தடுக்க முடியும். எனவே பெண்கள் மாதவிடாய் சமயத்திலும், மெனோபாசின் போதும் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து மருத்துவரை அணுகுவது அவசியம்.