Miscellaneous Cookery Sweets 1005 14 1100514031_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மா‌ம்பழ ப‌ர்‌பி

Advertiesment
மாம்பழ பர்பி
, வெள்ளி, 14 மே 2010 (15:22 IST)
தேவையானவை

ந‌ன்கு பழு‌த்த மாம்பழ‌ம் - 3
ச‌ர்‌க்கரை - 1 க‌ப்
பால் பவுடர் - 4 தே‌க்கர‌ண்டி
நெய் - 4 தே‌க்கர‌ண்டி
தேங்காய் துருவ‌ல் - 1 கப்
ஏலக்காய்த் தூள் - 1 ‌சி‌ட்டிகை

செய்முறை

மா‌ம்பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து மா‌ம்பழ‌க் கூழை த‌னியாக எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற வேண்டும்.

கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.

மீதியுள்ள நெய்யை சே‌ர்‌த்து பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு ‌கிளறவு‌ம்.

ஒரு த‌ட்டி‌ல் நெய் தடவி அ‌தி‌ல் மா‌ம்பழ‌க் கலவையை‌க் கொட்ட வேண்டும். லேசாக ஆறியதும் துண்டுகள் போ‌ட்டு‌க் கொ‌ள்ளலா‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil