Miscellaneous Cookery Nonveg 1002 01 1100201068_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோழிக்கறி கொத்து பரோட்டா

Advertiesment
கோழிக்கறி கொத்து பரோட்டா
, திங்கள், 1 பிப்ரவரி 2010 (16:45 IST)
தேவையானவை

கோழிக்கறி - 1/4 கிலோ
பரோட்டா - 4
நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள், தனியா தூள் - தலா 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
எண்ணெய் - சிறிது
சோம்பு, பட்டை - தாளிக்க

செய்யும் முறை

கோழிக்கறியை மஞ்சள் தூள், இஞ்சி விழுது சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, பட்டை, சிறிது கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். பின்னர், வெங்காயம், தக்காளி, மிகவும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு வதக்கவும்.

மேலும் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

பின்னர் வேக வைத்த கோழிக் கறித் துண்டுகளை இதில் சேர்த்து நன்கு கரண்டியால் மசித்து கிளறவும்.

தண்ணீர் சுண்டி வரும்போது பரோட்டாக்களை உருட்டி கத்தியைக் கொண்டு நறுக்கி இதில் சேர்த்து கிளறவும்.

இறுதியாக மிளகு தூள், கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

Share this Story:

Follow Webdunia tamil