Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை தொடர் ஏற்றம்.. ஒரு சவரன் ரூ.59000 என நெருங்கியதால் அதிர்ச்சி..!

Siva
புதன், 23 அக்டோபர் 2024 (11:12 IST)
தங்கம் விலை கடந்து சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்றும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 40 ரூபாயும் ஒரு சவரனுக்கு 320 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து தங்கம் விலை ரூபாய் 59 ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் மிக விரைவில் 60,000 என்று இலக்கை அடையும் என்று கூறப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,30 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து ரூபாய்  58,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,795  எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 112.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  112,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை..!

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

இன்று 2025 புத்தாண்டு.. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments