Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி சிறப்பு ரயில்.. 3 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்..!

Mahendran
புதன், 23 அக்டோபர் 2024 (11:06 IST)
தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக 5 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே ஏற்பாடு செய்திருந்த நிலையில், அந்த ரயில்களுக்கான டிக்கெட்டுகள் மூன்று நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில், 5 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால், 8:03 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, மங்களூர் ஆகிய மூன்று நகரங்களுக்கு இயக்கப்பட இருக்கும் சிறப்பு ரயில்களுக்கு மூன்று நிமிடங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்து விட்டது என்றும், தற்போது வெயிட்டிங் லிஸ்ட் தான் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறுகிய நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதால், டிக்கெட் கிடைக்காத பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments