Publish Date: Mon, 05 Aug 2024 (11:06 IST)
Updated Date: Mon, 05 Aug 2024 (11:08 IST)
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் பட்ஜெட்டில் வரி குறைப்புக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் குறைந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்த உள்ளதாகவும் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,470 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 51,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,925 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது