Publish Date: Sun, 04 Aug 2024 (18:00 IST)
Updated Date: Sun, 04 Aug 2024 (18:02 IST)
கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கிய பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை முதல் வெயில் கொளுத்திக் கொண்டிருந்த நிலையில் சட்டென வானிலை மாறி தற்போது சென்னையில் முக்கிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தேனாம்பேட்டை, தாம்பரம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது
சில இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சென்னை தற்போது குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.