Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாகவும் பங்குச்சந்தை உயர்வு.. மீண்டும் காளையின் பிடியில் வருமா?

Siva
புதன், 29 ஜனவரி 2025 (10:04 IST)
பங்குச்சந்தை கடந்த திங்கட்கிழமை சரிந்தாலும், செவ்வாய்க்கிழமை ஆன நேற்று ஓரளவு உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியபோது, பாசிட்டிவாக தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்பு, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்ந்து 76,173 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 23,055 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், விப்ரோ, டெக் மகேந்திரா, டி.சி.எஸ், டாடா ஸ்டீல், ஸ்ரீராம் பைனான்ஸ், இன்போசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது. அதேபோல், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பங்குச்சந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக மோசமாக சரிந்த நிலையில், தற்போது மீண்டும் பங்குச்சந்தை காளையின் பிடியில் வந்திருப்பதை அடுத்து, இனி வரும் நாட்களிலும் பாசிட்டிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு 5600 ரூபாய் அபராதம்! 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!

ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”! நாட்டு மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்!

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments