கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மூன்று நாட்கள் இறங்கிய நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சற்றே பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்து 66020 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 18163 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே சென்செக்ஸ் 61 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் பங்கு சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்செக்ஸ் 56000 என்று இருந்த நிலையில் தற்போது 5000 புள்ளிகள் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது