நீண்ட ஏற்றத்திற்கு பின் சிறிய சரிவு: இன்றைய சென்செக்ஸ் நிலவரம்!
, புதன், 2 நவம்பர் 2022 (09:44 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
கடந்த சில நாட்களுக்கு முன் சென்செக்ஸ் 58000 என்றிருந்த நிலையில் தற்போது சென்செக்ஸ் 61 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று பங்குச் சந்தையில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்து 61040 என்ற வரிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 20 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 125 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய பங்குச்சந்தை மிகக் குறைந்த அளவில் சரிந்து இருந்தாலும் மதியத்திற்கு பின் பங்குச்சந்தையில் ஏற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்