பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது. சற்றுமுன் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 153 புள்ளிகளும் உயர்ந்து 65,712 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 19,465 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது,. இன்று மட்டும் இன்றி தொடர்ச்சியாக இன்னும் பங்குச்சந்தை அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்செக்ஸ் 70 ஆயிரத்தை தாண்டும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.