Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே ஒரு நாள் தான் ஏற்றம்.. மீண்டும் சரியும் பங்குச்சந்தை..!

Share Market
, புதன், 22 பிப்ரவரி 2023 (09:37 IST)
பங்குச்சந்தை கலந்த சில நாட்களாக சரிவில் இருந்து வரும் நிலையில் குறிப்பாக அதானி விவகாரம் காரணமாக மிக மோசமாக சரிந்து வரும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்காத வகையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 280 புள்ளிகள் சார்ந்து 60 ஆயிரத்து 400 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 80 புள்ளிகள் சார்ந்து 17745 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் புதிதாக முதலீடு செய்பவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

101 ஜோடிகளுக்கு இலவச திருமணம்! – வெட்டிங் ஓவ்ஸ் கனெக்ட் ஏற்பாடு!