Publish Date: Mon, 20 Feb 2023 (10:20 IST)
Updated Date: Mon, 20 Feb 2023 (10:21 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 61,130 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன லிப்ட் 15 புள்ளிகள் உயர்ந்து 17,960 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தாலும் வரும் நாட்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் அதனால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.