Publish Date: Thu, 21 Apr 2022 (10:06 IST)
Updated Date: Thu, 21 Apr 2022 (11:07 IST)
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 460 புள்ளிகள் அதிகரித்தது.
கடந்த சில நாட்களக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
நேற்று சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 460 புள்ளிகள் அதிகரித்து, 57,503 புள்ளிகளுடன் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 130 புள்ளிகள் அதிகரித்து, 17,265 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது.