மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை : சவரன் எவ்வளவு?

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (12:32 IST)
திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் இன்றும் விலை குறைவு நீடித்து வருகிறது.

சவரனுக்கு 27 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை விற்று வந்த தங்கம் கடந்த சில மாதங்களாக விலை ஏற தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த 4ம் தேதி சவரன் தங்கம் 30,120 ரூபாய்க்கு விற்பனையானது. இது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து 28,632 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து 3,579 ரூபாயாக உள்ளது. தற்போதைய இந்த விலையிலிருந்து இன்னும் விலை குறையக்கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்வப்பெருந்தகை மாற்றமா? மாணிக் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவரா? திமுக அதிர்ச்சி..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments