Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடு முழுவதும் இ - சிகரெட்டுக்கு தடை : மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் இ - சிகரெட்டுக்கு தடை : மத்திய அரசு அதிரடி
, புதன், 18 செப்டம்பர் 2019 (16:19 IST)
உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருளான இ - சிகரெட்டுக்கு தடைவிதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இ -  சிகரெட்டுக்கு தடை விதித்து மத்திய அமைச்சர் உத்தரவிட்டார்.
இ - சிகரெட்டை தடை செய்வதற்கான அவசரச் சட்டம் மத்திய அமைச்சரவை குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் இ - சிகரெட் தடையை மீறுபவர்களுக்கு ஒருவருடம் சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் இ - சிகரெட்டுக்கு இன்று மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மேலும், இ - சிகரெட் உற்பத்தி ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, அதை விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிரடி ஆஃபர்களை அள்ளித்தரும் அமேசான்: விழாக்கால சிறப்பு விற்பனை