Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1995லேயே இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினி?- வீடியோ வெளியிட்ட ரஜினி ரசிகர்கள்

1995லேயே இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினி?- வீடியோ வெளியிட்ட ரஜினி ரசிகர்கள்
, புதன், 18 செப்டம்பர் 2019 (18:01 IST)
நடிகர் ரஜினிகாந்த் இந்தியை தமிழகத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளது இன்று பரபரப்பு செய்தியாக போய்க் கொண்டிருக்கிறது.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த் இந்தியை பொது மொழியாக்குவது குறித்த தன் கருத்துகளை தெரிவித்தார். அவர் ”இந்தியாவுக்கென பொதுவாக ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு அது உதவும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அப்படி கொண்டு வர முடியாது. இந்தியை பொது மொழியாக கொண்டு வருவதை தமிழ்நாடு ஒருபோது ஏற்றுக் கொள்ளாது. தமிழ்நாடு மட்டுமல்ல வட மாநிலங்கள் பலவே இதை ஏற்றுக்கொள்ளாது” என கூறினார்.

பாஜக-வின் நல்ம் விரும்பி ரஜினி என பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி ரசிகர்கள் “ரஜினி என்ன இதை இப்போதா சொன்னார்? 1995லேயே சொல்லிவிட்டார்.” என்று கூறி ஒரு வீடியோவை இணைத்துள்ளனர்.

1995ல் பொதிகை தொலைக்காட்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியின் ஒலி வடிவம் அதில் இடம் பெற்றுள்ளது. அதில் தற்போது கூறிய கருத்துக்கு நிகரான கருத்தை கூறும் ரஜினி “இந்தியாவுக்கென பொது மொழி ஒன்று இருக்க முடியாது. அமெரிக்கா போல இந்தியா சில மாகாணங்களின் தொகுப்பு அவ்வளவுதான்!” என பேசியுள்ளார்.

இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வரும் ரஜினி ரசிகர்கள் “ரஜினி என்றுமே ஒரே சிந்தனையுடையவர். மேலும் அவர் மறைமுகமாக எந்த கட்சிக்கும் ஆதரவு தருபவரும் அல்ல” என்று கூறியுள்ளார்கள்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜவஹர்லால் நேரு ”அந்த” விஷயத்தில் வீக்.. பாஜக எம்எல்ஏ வின் சர்ச்சை பேச்சு