முதல்முறையாக ஒரு கிராம் ரூ.8000ஐ தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!

Siva
புதன், 19 பிப்ரவரி 2025 (09:53 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 65 ரூபாயும் ஒரு சவரன் 520 ரூபாயும் உயர்ந்துள்ளது. தங்க விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிராம் 8000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது என்பதும் அதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 64 ஆயிரத்தை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் ஒரு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ஆயிரம் என்று உயரும் என நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் இன்றைய தங்கம் விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ரூபாய்   8,035 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 உயர்ந்து  ரூபாய்  64,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,765 எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,120 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments