Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்.. தேவஸ்தானம் எச்சரிக்கை..!

Mahendran
புதன், 19 பிப்ரவரி 2025 (09:47 IST)
திருப்பதி தேவஸ்தான தரிசன டிக்கெட் வாட்ஸ்அப் மூலம் கிடைக்கும் என்றும் ஒருசிலர் இதுபோன்ற மோசடி செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சமூக வலைதளங்களில், திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என்று சிலர் புதிய மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பக்தர்கள் இதனை நம்ப வேண்டாம் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் மூலம் விற்பனை கிடையாது என்று தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், பக்தர்கள் வாட்ஸ்அப்பில் "ஹாய்" என்று மெசேஜ் அனுப்பினால் ஏழுமலையான் தரிசன டிக்கெட் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை நம்ப வேண்டாம் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு ஒரு மோசடி கும்பல் பக்தர்களிடம் லட்ச கணக்கில் பணம் ஏமாற்றி வருகின்றது. ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவின் போது பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது போன்ற மோசடி தகவல் கிடைத்தால், உடனடியாக தேவஸ்தானத்திற்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments