தேர்தல் இழுபறியால் வரலாறு காணாத சரிவு.. சென்செக்ஸ் 4300 புள்ளிகள் சரிவு..!

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (15:35 IST)
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்பதால் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாஜக கூட்டணி 295 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்றும் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே சாத்தியம் என்பதும் தெரிய வந்துள்ளது
 
இதனை அடுத்து பங்குச்சந்தை இன்று காலை முதல் மிக மோசமாக சரிந்து உள்ளது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4300 பள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து உள்ளது என்றும் நிஃப்டி 1300க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்த சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுடன்தான் கூட்டணி!. தவெக தலைமையில் ஆட்சி!.. தெறிக்கவிட்ட விஜய்...

டபரா செட் போய் நெக்ஸ்ட் பூஸ்ட் பாட்டில்!.. தவெகவை ட்ரோல் பண்ணும் திமுகவினர்...

தேர்தல் நடத்தை விதிகள் அமூல்!.. மூன்று நாட்களில் 42.65 கோடி பறிமுதல்!..

மம்தா பானர்ஜியின் மொத்த திட்டமும் காலி.. தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை..!

நகை, பணம் மட்டுமல்ல.. சிலிண்டர்களையும் திருடும் திருடர்கள்.. ஜட்ஜ் வீட்டிலேயே 4 சிலிண்டர்களை காணோம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments