பாராளுமன்ற தேர்தலின் எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் அதில் பெரும்பாலான முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக வந்தது என்பதும் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பார் என்று வெளியானதை அடுத்து இன்று பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் இன்று பங்குச்சந்தை உச்சத்துக்கு சென்றுள்ளது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் 52 வார அதிகபட்ச விலை இறங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக அதிகமாக உயர்ந்து உள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் குவிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய அதானி குழும பங்குகளின் நிலை:
அதானி பவர் பங்குகள் இன்று ரூ.864.30க்கு தொடங்கி 12 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ரூ.876.35 ஐ எட்டியது.
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் ரூ.3682.65-ல் தொடங்கி 9 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ரூ.3,716.05ஐ எட்டியது.
அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகள் ரூ.1534.25க்கு தொடங்கி 9 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ரூ.1,572.10 வர்த்தகமாகி வருகிறது.