Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணாமலைக்கு இன்று பிறந்த நாள்.. கோவை வெற்றி பரிசாக கிடைக்குமா?

Annamalai

Siva

, செவ்வாய், 4 ஜூன் 2024 (07:21 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்று பிறந்தநாள் என்ற நிலையில் அவர் போட்டியிட்ட கோவை தொகுதி வெற்றி அவருக்கு பரிசாக கிடைக்குமா என்பது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தெரிந்து விடும். 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றவுடன் தான் தமிழகத்தில் பாஜக கட்சியை படிப்படியாக வளர்ந்தது என்பதும் பட்டி தொட்டிக்கெல்லாம் பாஜக என்ற ஒரு கட்சி இருக்கிறது என்பதை அவர் கொண்டு சென்றிருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் அண்ணாமலை தலைமை பொறுப்பேற்றவுடன் எதிர்கொள்ளும் முதல் பாராளுமன்ற தேர்தல் என்ற நிலையில் தமிழக பாஜகவை அவர் காரை சேர்ப்பாரா? கோவை தொகுதியில் போட்டியிடும் அவருக்கு வெற்றி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கோவை மக்கள் பிறந்தநாள் பரிசாக கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் அண்ணாமலைக்கு நடிகர் சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பதாவது: 
 
அருமை நண்பரும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரும், சிறந்த அரசியல்வாதியுமான திரு.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நல பணிகளில் தாங்கள்  செலுத்தும் அர்ப்பணிப்பு, ஈடுபாடு,  அயராத உழைப்பு, விடாமுயற்சிக்காகவும் மாபெரும் வெற்றி பிரகடனம் செய்யப்படும் நாளாக தங்கள் பிறந்தநாள் அமைய நல்வாழ்த்துகள். இறைவன் அருளால் நீண்ட ஆயுளோடும், பூரண ஆரோக்கியத்தோடும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிடுங்கள்..! ஜனாதிபதிக்கு, முன்னாள் நீதிபதிகள் கடிதம்..!!