Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் போட்டி.! தொல்.திருமாவளவன் அறிவிப்பு..!

Senthil Velan
செவ்வாய், 5 மார்ச் 2024 (15:42 IST)
மக்களவைத் தேர்தலில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென் மாநில செயற்குழு நிர்வாகிகளுடன் தொல்.திருமாவளவன் ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
 
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன், கேரளாவில் மூன்று தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
தெலுங்கானாவில் பத்து தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்றும்  ஆந்திராவில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்படும் என்றும் கூட்டணி குறித்து ஆந்திராவில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தொல்.திருமாவளவன் கூறினார். கர்நாடகாவில் ஆறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை போட்டியிடும் என்று அவர் தெரிவித்தார். 

ALSO READ: புதுச்சேரியில் மாயமான சிறுமி சடலமாக மீட்பு..! உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை..!!
 
மேலும் திமுகவிடமிருந்து அழைப்பு வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என  தெரிவித்த திருமாவளவன், மின்னணு இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளையும்  எண்ண வலியுறுத்தி மார்ச் 10 ஆம் தேதிக்கு பின் தென் மாநிலங்களில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது.. ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதலா?

சீனா, ஹாங்காங்கில் இருந்து வரும் சர்வதேச பார்சல்கள் நிறுத்தம்.. அமெரிக்கா அதிரடி

இன்னும் 2 வாரங்களுக்கு பனிமூட்டம் இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் மீது புகார்! - 3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

'காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments