Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை : உதவி எண் அறிவிப்பு

Advertiesment
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை : உதவி எண் அறிவிப்பு

Siva

, செவ்வாய், 5 மார்ச் 2024 (13:18 IST)
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ஆம்  தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆரம்பமானது என்பதும் நேற்று முதல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகியுள்ளது என்பது தெரிந்தது. மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பமாக இருக்கும் நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் உளவியல் ரீதியாக பிரச்சனை ஏற்பட்டால் அவர்களுக்கு ஆலோசனை வழங்க உதவி எண் வழங்கப்பட்டுள்ளது.

144416 என்ற இந்த உதவி எண்ணை தேர்வு நேரத்தில் ஏற்படும் அச்சம், உளவியல் ரீதியான ஆலோசனை ஆகியவை குறித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த பணிக்காக 40 ஆலோசகர்கள் பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அச்சம் உள்பட ஏதேனும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்தால் இந்த எண்களுக்கு பேசி தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் குடும்பம் என்பது இந்திய மக்கள் அல்ல. அம்பானியும் ,அதானியும் தான் செல்வப் பெருந்தகை கருத்து