Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே மேடையில் விவாதம் – அன்புமணியின் சவாலை ஏற்ற உதயநிதி !

Advertiesment
ஒரே மேடையில் விவாதம் – அன்புமணியின் சவாலை ஏற்ற உதயநிதி !
, வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (16:59 IST)
பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணியின் சவாலை ஏற்று ஒரே மேடையில் விவாதம் செய்ய தயார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. அனைத்துக் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். பிரச்சாரங்களின் போது எதிர்க் கட்சிகளைத் தாக்கி பேசும் அதே வேளையில் தனிநபர் தாக்குதல்களும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சுமத்தினார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் ‘நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மேடையைப் போடுங்கள். நான் வருகிறேன். திமுக தலைவராகிய நீங்கள் வாருங்கள் அல்லது உங்கள் மகனை அனுப்புங்கள். நலத்திட்டங்களை விவாதம் செய்யலாம். விவாதத்துக்குத் தயாரா ?’ எனக் கேள்வி எழுப்பினார்.

இது பற்றி உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது ‘ விவாதத்துக்கு நானும் தயார். எங்கு வேண்டுமானாலும் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். முதலில் 8 வழிச்சாலை திட்டத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம்’ எனப் பதிலளித்துள்ளார். இருவரின் காரசாரமான பேச்சால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டான்ஸ் ஆட மறுத்த மனைவி: மொட்டையடித்த கணவன்!!!