Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மா ஞாபகம் வந்துடுச்சு!! தேனியில் தேம்பி தேம்பி அழுத அதிமுக வேட்பாளர்!!!

Advertiesment
அதிமுக
, வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (15:30 IST)
அதிமுக வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் தேம்பி அழுத சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
பாராளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்கலையொட்டி அமைச்சர்கள் மட்டும் கட்சி பிரமுகர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பரப்புரையில் ஈடுபடும் முக்கிய பிரமுகர்கள், வேட்பாளர்களின் பெயரை மாற்றி சொல்லியும், கட்சியின் சின்னத்தை மாற்றி கூறியும் அக்கப்போர் செய்து வருகின்றனர். சில இடத்தில் மக்கள் வேட்பாளர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் துரத்தியும் வருகின்றனர்.
 
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜன் நேற்று ஜீப்பில் இருந்தவாறு மக்களிடையே பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.
 
தொடர்ச்சியாக மறவட்டியில் என்ற ஊரில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது திடீரென தேம்பி தேம்பி அழுதார். இதனால் கூட இருந்த கட்சி நிர்வாகிகள் திகைத்து போயினர். பின்னர்தான் தெரிந்தது அவர் அம்மா ஞாபகத்தில் அழுதார் என்று.
webdunia
அம்மா என்றால் ஜெயலலிதா அம்மா இல்லை. லோகிராஜனை பெற்றெடுத்த அம்மா. மறவட்டி அவரின் தாயின் சொந்த ஊர். தனது தாயின் ஊருக்கு வந்ததும், அவருக்கு தனது தாயின் ஞாபகம் வந்ததால் அவர் கதறி அழுதார்.
 
கட்சிகாரர்களும் அந்த ஊர் மக்களும் அவரை ஆசுவாசப்படுத்தினர். இதே தொகுதியில் அவரை எதிர்த்து அவரின் கூட பிறந்த தம்பி மகாராஜன் திமுக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரச்சார மேடையில் சேர், செருப்பு வீச்சு , அடிதடி : 3 பேர் காயம்