Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஸ்க் இல்லா வெற்றி... ஆனா தினகரனை வைத்து ஸ்டாலின் பக்கா பிளானிங்..

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (17:44 IST)
நாடாளுமன்ர தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரித்துவிடும் என்ற காரணத்தால் ரிஸ்க் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற ப்ளான் செய்து வருகிறாராம் திமுக தலைவர் ஸ்டாலின். 
 
திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்திக்க இருக்கிறது. தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருப்பது ஸ்டாலினுக்கு பெரிய பிளஸ்சாக உள்ளது. 
 
அமமுக வேட்பாளர்கள் இதற்கு முன் அதிமுகவில் இருந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு இப்போதும் அதிமுக தொண்டர்களின் ஆதரவு நிறைய இருக்கிறது. தேனியில் ரவீந்திரநாத்திற்கு போட்டியாக தங்க தமிழ்ச்செல்வன், நெல்லையில் மனோஜ் பாண்டியனை எதிர்த்து மைக்கேல் ராயப்பன், தருமபுரியில் அன்புமணிக்கு எதிராக பழனியப்பன் எல்லாம் தினகரனின் பக்கா பிளான். 
ஆனால், தினகரனின் ப்ளானை வைத்து ஸ்டாலின் ரிஸ்க் இல்லாமல் ஈஸியாக வெற்றி பெற திட்டம் போட்டுள்ளார். அதாவது, திமுக கூட்டணியின் வாக்கு எப்போதும் போல வரும், அதேசமயம் அதிமுக வாக்கு அமமுக பக்கம் செல்லும். அதாவது அதிமுகவின் வாக்கு வங்கி பிரியும்.  
 
இதனால் ஸ்டாலின் பிரச்சாரங்களில் அமமுகவை விட்டுவிட்டு நேரடியாக அதிமுகவை மட்டும் டார்கெட் செய்து பேசி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments