Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பெண் வேட்பாளரை துரத்திய மக்கள்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (11:47 IST)
காஞ்சிபுரத்தில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக பெண் வேட்பாளரை பொதுமக்கள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாராளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்கலையொட்டி அமைச்சர்கள் மட்டும் கட்சி பிரமுகர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பரப்புரையில் ஈடுபடும் முக்கிய பிரமுகர்கள், வேட்பாளர்களின் பெயரை மாற்றி சொல்லியும், கட்சியின் சின்னத்தை மாற்றி கூறியும் அக்கப்போர் செய்து வருகின்றனர். சில இடத்தில் மக்கள் வேட்பாளர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் துரத்தியும் வருகின்றனர்.
 
இந்நிலையில் காஞ்சிபுரம் அதிமுக எம்.பியும், தற்போதைய நாடாளுமன்ற வேட்பாளருமான மரகதம் குமாரவேல் மக்களிடையே வாக்கு சேகரிக்க சென்றார். செய்யூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரை மறித்த பொதுமக்கள் இதுவரை இந்த தொகுதிக்காக என்ன செய்தீர்கள்? மீண்டும் எதற்கு இங்கு வந்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
 
மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாத மரகதம், விட்டால் போதும் என்பது போல அங்கிருந்து சென்றார். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments