கரூர் மாவட்டம் நங்கவரம் மற்றும் மருதூர் பேரூராட்சி அமமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி விலகி அதிமுகவில் இணைந்தனர்.
மருதூர் பேரூராட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் சிங்காரம் மற்றும் நங்கவரம் பேரூராட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் நடராஜன் மற்றும்கிளைக் கழக செயலாளர் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி, இன்று கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துறை அமைச்சர், கரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று ஒன்று இல்லவே இல்லை.
அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யும் வேலையில் நங்கவரம் மற்றும் மருதூர் பேரூராட்சி செயலாளர்கள் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து உள்ளனர். அவர்களை வரவேற்கிறேன்.
அதிமுகவும் அமமுகவும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. கரூர் பாராளுமன்ற தொகுதியில் அம்முக இல்லவே இல்லை. அதிமுகவிற்கும் திமுக கூட்டணி காங்கிரசுக்கும் இடையேதான் தேர்தல் போட்டி உள்ளது என்றார்.
மேலும் இன்று தான் கரூருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வந்திருக்கும் வேலையில் இவ்வாறு நடைபெற்ற சம்பவம் மற்ற அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பெரும் மகிழ்ச்சியையும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகளிடம் பெரும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.