Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கட்சி மாறும் ரஜினி-கமல் பட நடிகை!

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (07:57 IST)
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த 'நினைத்தாலே இனிக்கும்', கமல்ஹாசன் நடித்த சலங்கை ஒலி, தசாவதாரம் உள்பட பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்ரதா. கடந்த 80களில் இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர்.
 
இந்த நிலையில் நடிகை ஜெயப்ரதா முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியிலும், அதன்பின்னர் ராஷ்டிரிய லோக் மன்ச் என்ற கட்சியிலும் இணைந்தார். இந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
பாஜகவில் இணையும் நடிகை ஜெயப்ரதாவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் தொகுதியை அக்கட்சி ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசிம்கான் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து போட்டியிட ஜெயப்ரதாவே சரியான வேட்பாளர் என பாஜக மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது.

மேலும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து ஜெயப்ரதா விலக, ஆசிம்கான் தான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுவதால் தனிப்பட்ட வகையிலான எதிரியை வீழ்த்தவும் அவர் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாட்களில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! 6 நாட்களுக்கு மிதமான மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்ய பிரியா கொலை வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments