Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தலே இருக்காது: எச்.ராஜா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தலே இருக்காது: எச்.ராஜா
, திங்கள், 25 மார்ச் 2019 (08:27 IST)
வரும் மக்களவை தேர்தலில் வட மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறி வரும் நிலையில் தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பாஜக படுதோல்வி அடையும் என்றே கணிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்தது
 
இந்த நிலையில் சிவகங்கை தொகுதியில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார். எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சுகளால் தமிழக மக்கள் அவர் மீது எந்த அளவுக்கு அதிருப்தியாக இருக்கின்றார்களோ, அதே அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் ப.சிதம்பரம் குடும்பத்தின் மீதும் மக்கள் வெறுப்பில் உள்ளனர். 
 
இந்த நிலையில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தேர்வை காங்கிரஸ் கட்சியில் உள்ள பலரே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
 
webdunia
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசிய எச்.ராஜா கூறியதாவது: இது தேசத்தை காப்பாற்றுவதற்காக நடைபெறுகின்ற தேர்தல் இது. தற்போது ஜனநாயகம், மதச்சார்பின்மை,  சோஷியலிசம் ஆகிய மூன்றுக்கும் ஆபத்து வந்துள்ளது. இன்னொரு முறை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல் என்பதே இருக்காது. அரசியல் சட்டத்துக்கே அவசியம் இருக்காது. தூக்கியெறிந்துவிடுவார்கள். ஐந்தாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினாராக நான் இருந்தபோது எவ்வாறு பணியாற்றினேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தற்போது இன்னொரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்தால், அதைவிட சிறப்பாகப் பணியாற்றுவேன்” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த 8 காரணங்களால் தான் கட்சியை தொடங்கினேன்: மனம்திறந்த கமல்ஹாசன்