Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவ்வளவுதானா உங்க பவர்; பூசி மொழிகிய தமிழிசை!!

Advertiesment
அவ்வளவுதானா உங்க பவர்; பூசி மொழிகிய தமிழிசை!!
, சனி, 23 மார்ச் 2019 (19:31 IST)
அடுத்த மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பிரச்சாரத்தையும் தீவிரவாகமாக துவங்கியுள்ளது. 
 
பாஜக தலைமை மார்ச் 21 முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால், இதற்கு முன்னரே எச்.ராஜாவும், வானதி சீனிவாசனும் இதர்கு முன்னரே வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டனர். 
 
இது பாஜகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால்  தமிழிசை எச்.ராஜா மீது கடும் கோபத்தில் இருந்தார் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவிக்கும் முன்னரே எச்.ராஜாவும் வானதி சீனிவாசனும் அறிவித்து விட்டார்கள். இந்த விவகாரத்தில் தலைவராக அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று தமிழிசையிடம் கேடகப்பட்டது. 
webdunia
இதற்கு அவர், வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னரே இருவரும் அறிவித்தது தவறுதான். அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. வருங்காலத்தில் இதுபோன்று நடக்காது, நடக்கக் கூடாது. 
 
எனக்கு இதில் வருத்தம்தான். ஆனால் தேர்தல் நேரத்தில் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. தேவையில்லாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் அதிபராக ரஷ்யா உதவியதா - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு