Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப்பா மேட்டர்..... உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ருசிகரம்!!!

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (12:07 IST)
உதயநிதியில் பிரச்சாரத்தில் ஏற்கனவே பெயர் வைக்கப்பட்ட குழந்தைக்கு மீண்டும் பெயர் வைக்க சொன்ன சம்பவம் நடைபெற்றுள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் முதல்முறையாக திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி களமிறங்கியுள்ளார். முதல்வர், துணை முதல்வர், மோடி என அனனவரையும் காரசாரமாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனம் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக அன்புமணியை கண்டமேனிக்கு விமர்சித்து வருகிறார். 
 
இந்நிலையில் உதயநிதி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பரப்பபுரை மேற்கொண்டார். அப்போது பெண்மணி ஒருவர் தனது 2 வயது குழந்தைக்கு பெயர் வைக்கும்படி குழந்தையை உதயநிதியிடம் கொடுத்தார். குழந்தையை பார்த்த உதயநிதி, இன்னமுமா குழந்தைக்கு பெயர் வெக்கல என சொல்லியபடியே குழந்தையிடம் உனது பெயர் என்ன பாப்பா? என கேட்டார். என் பெயர் சோபிகா என குழந்தை கூறியது. குழந்தை கூறியது உதயநிதி கையில் வைத்திருந்த ‘மைக்’ மூலம் ஒலிப்பெருக்கியில் எதிரொலித்தது. இதனால் உதயநிதி உட்பட அங்கிருந்த மக்கள் கொல்லென சிரித்தனர்.  பின்னர் குழந்தையை தாயிடம் ஒப்படைத்த உதயநிதி இந்த பெயரே நன்றாக தான் உள்ளது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments