Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் சீமான் பிரச்சாரம் சரியில்லை: இயக்குனர் சேரன் குற்றச்சாட்டு

கமல் சீமான் பிரச்சாரம் சரியில்லை: இயக்குனர் சேரன் குற்றச்சாட்டு
, வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (21:43 IST)
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தங்களுடைய உச்சகட்ட பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த முறை அதிமுக, திமுக கூட்டணி மட்டுமின்றி கமல்ஹாசனும் தினகரனும் ஒரு சிறிய கூட்டணியை அமைத்து களத்தில் உள்ளனர். ஏற்கனவே ஒருசில தேர்தலில் களம் கண்ட சீமானும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் சீமான் பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் சேரன், மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி தலைவர்கள் கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களை கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள் என்றும், தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள்தானே.. என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
webdunia
மேலும் ‘‘எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும். யாரை நம்பி மாற்றம் தேடுவது. சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சேரனின் இந்த பதிவுகளுக்கு பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடிக்கு ’உயரிய விருது ’: பாஜக கொண்டாட்டம்