Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ.பி.எஸ். மகன் vs தினகரன் மனைவி ? – களைகட்டும் தேனி !

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (08:47 IST)
தேனி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்தருக்கு எதிராக தனது மனைவியைக் களமிறக்க தினகரன் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக அதிமுக ஆகிய அணிகளில் இணைந்துள்ளன. திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றனர். அதிமுக தங்கள் கட்சி போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சசிகலாவின் குடும்ப அரசியலுக்கு எதிராக தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ் தனது குடும்ப உறுப்பினருக்கு சீட் கொடுத்துள்ளது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து அதிமுக வேட்பாளரான ஓ.பி. ரவிந்தரநாத் தாகூருக்கு எதிராக தேனி தொகுதியில் வலுவான வேட்பாளரைக் களமிறக்க டிடிவி தினகரன் முயன்று வருவதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ’ தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தினால் நான் கூட நிற்கத்தயார்’ எனக் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது தேனித் தொகுதியில் தனது மனைவி அனுராதாவா அல்லது இளவரசியின் மகன் விவேக் ஆகிய இருவரில் யாராவது ஒருவரை நிறுத்தும் யோசனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருவருமே ஜெயா தொலைக்காட்சியில் நிர்வாகப் பின்னணியில் வேலை செய்த அனுபவமுள்ளவர்கள் என்பதால் இருவரில் ஒருவர் தேனி தொகுதியில் நிற்கவைக்கப்படுவார்கள் என்கிறது அமமுக வட்டாரம்

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments