Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்டரை ரிலீஸ் செய்ய முடியாது: விஜய்யிடம் நேரடியாக தெரிவித்த விநியோகிஸ்தரால் பரபரப்பு

Advertiesment
மாஸ்டரை ரிலீஸ் செய்ய முடியாது: விஜய்யிடம் நேரடியாக தெரிவித்த விநியோகிஸ்தரால் பரபரப்பு
, புதன், 18 மார்ச் 2020 (09:40 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செலும் என்றும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இருப்பினும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றபோது  இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றவர் விஜய்யே நேரடியாக சந்தித்து ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய தன்னால் முடியாது என்றும் எனவே ரிலீஸ் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் 
 
உலகின் பல நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டப்படி ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸானால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் அதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கவும் என்று கூறியுள்ளார். அவ்வாறு ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தால் அதற்கான நஷ்ட ஈடு விஜய் மற்றும் படக்குழுவினர் தான் தரவேண்டும் என்று அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை: படக்குழுவினர் தகவல்