Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை அடுத்து ரஜினி, சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்தி!

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (11:02 IST)
கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்த பிகில் படத்துடன் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் தைரியமாக ரிலீஸ் ஆகி பிகில் படத்தில் கிடைத்த லாபத்தை விட அதிகம் பெற்று வருகிறது. விஜய்யின் பிகில் படம் 180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 200 கோடி வசூலாகியுள்ளது என்றால் கைதி படம் சுமார் 30 கோடியில் தயாரிக்கப்பட்ட்டு ரூ.50 கோடியை தாண்டி வசூலில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிக சதவீத லாபத்தை கொடுத்துள்ளது என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம்
 
இந்த நிலையில் விஜய் படத்துடன் மோதி வெற்றி பெற்றதை அடுத்து, மேலும் இரண்டு பிரபல நடிகர்களுடன் மோத கார்த்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி நடிப்பில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படம் ரிலீஸ் ஆகும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாவிருப்பதாக கூறப்படுகிறது
 
அதேபோல் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்கல் தினத்தில் ரஜினியின் ’தர்பார்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதே நாளில் கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ’சுல்தான் வெளியாகவுள்ளதாம். 
 
விஜய்யை அடுத்து ரஜினி, சிவகார்த்திகேயனுடன் மோதவுள்ள கார்த்திக்கு இதிலும் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments