Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் இயக்கும் படமெல்லாம் காப்பியா..? முதன்முறையாக மனம் திறந்த அட்லீ!

Advertiesment
Atlee
, புதன், 30 அக்டோபர் 2019 (14:45 IST)
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் தற்போதைய வெற்றி பட இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த "முகப்புத்தகம்" என்ற குறும்படத்தின் மூலம் இயக்குனராக அதாரமெடுத்தார். 


 
பின்னர் 2013ம் ஆண்டு ஆர்யா - நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "ராஜா ராணி" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ஆனால், அந்த படம் முழுக்க முழுக்க "மௌனராகம்" படத்தின் காப்பி என்பது அப்பட்டமாக தெரிந்தது நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.  பின்னர் நடிகர் விஜய்யை வைத்து "தெறி" படத்தை இயக்கியிருந்தார். அந்த படமும் ரசிகர்களை ஈர்த்து கலெக்ஷ்ன் கல்லா கட்டிய நேரத்தில் அது விஜயகாந்தின் "சத்திரியன்" படத்தின் காப்பி என்பது வெளிச்சத்துக்கு வந்தது. 


 
இப்படி அடுத்தது சொந்த முயற்சியால் சிந்தித்து கதை எழுத தெரியாத இயக்குனர் அட்லீ என்றெல்லாம் கிண்டலடித்து வந்ததையும். தன் முயற்சியின் உந்துகோலாக எடுத்துக்கொண்டு மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து "மெர்சல்" படத்தை இயக்கி வெற்றி காண காத்திருந்த வேளையில் அது கமல் ஹாசனின் "அப்பு ராஜா" படத்தின் அப்பட்ட காப்பி என்பதை நெட்டிசன்ஸ் கண்டறிந்து கிண்டலடிக்க துவங்கினர். 


 
இதனால் மிகுந்த மன வருத்தத்திற்குள்ளான அட்லீ இனிமேல் ஒரே படத்தில் இருந்து கதையை கண்டறிந்து உருவாக்கக்கூடாது என புரிந்துகொண்டு பல படங்களில் இருந்து பல்வேறு காட்சிகளை எடுத்து படமாக இயக்கி சமீபத்தில் வெளிவந்துள்ள படம் தான் "பிகில்". ஆனால், பிகில் திரைப்படமும் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ‘சக்தே இந்தியா’ படத்தின் காப்பி என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது மட்டுமில்லாமல் பிகில் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் எல்லாம் ‘பீலே’ படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் என்றும் கூறப்படுகிறது. 


 
இந்நிலையில் தற்போது முதன்முறையாக இது குறித்து மனம் திறந்துள்ள அட்லீ,  நான் இதுவரை பார்த்த படங்களில் நிறைய படங்கள் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது, நான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2,000 படங்களையாவது ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதன் பிறகு ஒரு படத்தை எடுக்கும் போது அந்த கதையில் உண்மையையும், நியாயத்தையும் பொருத்தி எடுக்க வேண்டும். அப்படி உண்மையாக இருந்தால் அப்படத்தை தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.


 
அதே போல் மக்களும் ஏதாவது ஒன்றை சொல்லவேண்டும் என்பதற்காக என் படத்தை வேறு படங்களுடன் ஒப்பிட்டு இந்த படம் காப்பி, ரீமேக் என்று கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். இது பாதுகாப்பற்ற தன்மை. மேலும், எனக்கு அந்த பாதுகாப்பற்ற தன்மை இல்லை என்றும் இந்த படத்தின் கதை உள்ளடக்கம் என்னுடையது. அதே நேரத்தில் அவர்கள் சொன்ன  படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். எனக்கும் அந்த படங்களில் இருக்கும் ஒரு சில காட்சிகள் ரொம்ப பிடிக்கும். மேலும், பிகில் படத்தில் இருக்கும் காட்சிகள் அந்த படத்தின் பாதிப்பில் இருந்து உருவானது அல்ல. அது என் மனதில் தோன்றியது அதைத்தான் நான் இயக்கினேன் என்று அட்லி ஆணித்தரமாக அடித்து கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

KGF பட ஹீரோவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது - கியூட் புகைப்படம் இதோ!