Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ஜியோ பைபர் ’’Unlimited ஆஃபர் ! பயனாளர்கள் கொண்டாட்டம் ! 9 ஒடிடி தளங்கள் இலவசம் !

Advertiesment
’ஜியோ பைபர் ’’Unlimited ஆஃபர் !  பயனாளர்கள்  கொண்டாட்டம் !  9 ஒடிடி தளங்கள் இலவசம் !
, திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (16:31 IST)
ஜியோவின் வருகையால் இந்தியாவில் இணையப் புரட்சி உண்டானது. அனைவராலும் இணைதளம் டேட்டா கார்டுகள் பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவானது.

இந்நிலையில்  ரிலையன்ஸ் ஜியோ  பைபர் பிராண்ட் பயனாளர்களுக்கு அன்லிமிட்டேட் இணையதள சேவையை வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
webdunia

இப்புதிய திட்டங்கள் மாதத்திற்கு ரூ. 399 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன.  இந்தத் திட்டத்தின் கீழ் எல்லையற்ற இணையதள சேவையை வேகமாக பெறமுடியும். மேலும் 12 ஒடிடி தளங்களுக்கான சந்தாவையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரூ.399 திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வசதியும் வாய்ஸ் கால் வசதியும் வழங்கப்படுகிறது. ரூ.699 திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில்  அன்லிமிட்டேட் இணைய மற்றும் வரம்பற்ற வாய்ஸ்கால் வசதியை பயனாளர்கள் பெறலாம்.

ரூ.999 திட்டத்தில் எல்லையற்ற இணைய சேவையை 150 எம்பிபிஎஸ் வேகத்துடன் வழங்குகிறது.  இதில் அன்லிமிட்டேட் காலும்   11 ஒடிடி தளங்களுக்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரூ.1499 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவையைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
webdunia

ஒடிடி தளங்களைப் பெற ஜியோ பையர் செட்டாப் பாக்ஸை பெற வேண்டும்.  இச்சலுகை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளது. எனவே புதிய வாடிக்கையாளர்களுக்கு  30 நாள் இலவசமாக சேவையை வழங்குகிறது ஜியோ.

தற்போது இணையதளத்தில் ஜியோ பைபர் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல்காந்தி ஒரு அரைவேக்காடு...அமைச்சர்கள் எல்லை மீறிப் பேசுகிறார்கள் - ஹெச்.ராஜா