Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீடியோ கேம் விரும்பியா நீங்கள்? அப்படின்னா இந்த மொபைல் உங்களுக்குதான்

வீடியோ கேம் விரும்பியா நீங்கள்? அப்படின்னா இந்த மொபைல் உங்களுக்குதான்
, புதன், 17 ஜூலை 2019 (19:32 IST)
இந்திய இளைஞர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கும் ரெட்மி நிருவனம் தனது புதிய மாடலான ரெட்மி கே20ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த ரெட்மி கே20 மாடல் சமீபத்தில் வேறு சில நாடுகளில் விற்பனைக்கு வந்து சக்கைப்போடு போட்டுள்ளது. இந்தியாவிலும் மற்ற ஸ்மார்ட்போன்களின் விற்பனையை இது பின்னுக்கு தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக மற்ற நிறுவனங்களும் மொபைல்களை அறிமுகப்படுத்த இருக்கும் நிலையில் இந்த போனை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

வீடியோ கேம் விளையாடுவதற்கு ஏற்ற அதிநவீன ப்ராஸசர் இருப்பது முதன்மையான காரணம். இப்போது அனைத்து மொபைல்களிலும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 710தான் இருக்கிறது. ஆனால் இந்த மொபைலில் ஸ்னாப்ட்ராகன் 855 பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் செயல்திறன் மற்ற போன்களை விட சிறப்பாக இருக்கும்.

6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி AMOLED டிஸ்ப்ளே , 8 ஜி.பி ரேம் உடன் கேம் டர்போ 2.0வும் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் எடுக்க 48 எம்.பி முதன்மை கேமராவும், 8 எம்.பி மற்றும் 13 எம்.பியில் இரண்டு கேமராவும் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. இதன்மூலம் படங்களை துல்லியமாகவும், நல்ல குவாலிட்டியிலும் எடுக்க முடியும். இருட்டிலும் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

முன்பக்கம் செல்பி எடுக்க 20 எம்.பி பாப் அப் கேமரா உள்ளது. இந்த ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃப்ளேம் ரெட், கார்பன் ப்ளாக் மற்றும் க்லேசியர் ப்ளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

6 ஜி.பி ரேம் (128 ஜி.பி போன் மெமரி) கொண்ட மாடல் 27,999 ரூபாயும், 8 ஜி.பி ரேம் (256 ஜி.பி போன் மெமரி) கொண்ட மாடல் 30,999 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்களில் ஜூலை 22ம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை: சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு