பிரபல நோக்கியா நிறுவனத்தின் புதிய மாடலான நோக்கியா எக்ஸ்30 (Nokia X30) இன்னும் சில நாட்களில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் 90களில் இருந்து முன்னணியில் உள்ள நிறுவனம் நோக்கியா. தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் புதுப்புது அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது Nokia X30 ஸ்மார்ட்போன் 5ஜி வசதியுடன் வெளியாகவுள்ளது.
Nokia X30 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
-
ஸ்னாப்ட்ராகன் 695 5ஜி, ஆண்ட்ராய்டு 12, 3 ஓஎஸ் அப்கிரேடு,
-
அமோலெட் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி+ 1080 x 2400 ரெசல்யூசன்
-
8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
-
16 எம்பி முன்பக்க கேமரா, 50 எம்.பி ஓஐஎஸ் பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா
-
ப்ளூடூத் 5.1, என்.எப்.சி சப்போர்டட் வைஃபை, யூஎஸ்பி டைப் சி போர்ட்,
-
4200 mAh Battery, 33W ஃபாஸ்ட் சார்ஜ்,
-
டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக்,
இந்த Nokia X30 5ஜி ஸ்மார்ட்போன் ஐஸ் வொயிட் மற்றும் க்ளவுடி ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இதன் விற்பனை பிப்ரவரி 20ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.42,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.