இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு அறிமுகப்படுத்தி வரும் நிலையில் நோக்கியாவும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் குதித்துள்ளது.
இந்தியா முழுவதும் 5ஜி தொழில்நுட்பம், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் சந்தை உருவாகியுள்ளது. அதே சமயம் சராசரி சிறப்பம்சங்களுடன் கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கும் ஏக கிராக்கி உள்ளது. அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனின் விலையும் அதிகமாக இருப்பதால் ஏழை, நடுத்தர வர்க்க இளைஞர்கள் மற்றும் மக்களின் சாய்ஸாக ரூ.10 ஆயிரத்திற்குள் அடங்கும் ஸ்மார்ட்போன்களே உள்ளன.
இதனால் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ரூ.10 ஆயிரத்திற்குள் அடக்கமான விலையில் நல்ல வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுக செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போது புகழ்பெற்ற நோக்கியா நிறுவனம் Nokia C32 என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Nokia C32 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
-
6.52 இன்ச் டிஸ்ப்ளே, 720x1600 ரெசல்யூசன்
-
ஆக்டாகோர் ப்ராசஸர்
-
ஆண்ட்ராய்டு 13
-
4 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம்
-
64 ஜிபி / 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
-
256 ஜிபி வரை சப்போர் செய்யும் மெமரி ஸ்லாட்
-
50 எம்.பி + 2 எம்.பி ப்ரைமரி டூவல் கேமரா
-
8 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
-
5000 mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்த Nokia C32 ஸ்மார்ட்போன் Mint, Beach Pink மற்றும் Charcoal ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த Nokia C32 ஸ்மார்ட்போன் 4ஜி வரை சப்போர் செய்கிறது.
இந்த Nokia C32 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.8,999-க்கும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.9,499-க்கும் விற்பனையாகிறது. இரண்டு மாடல்களுக்கும் இடையே ரூ.500 மட்டுமே வித்தியாசம் உள்ளது.
கேமரா உள்ளிட்ட வசதிகளை பெரிதும் எதிர்பார்க்காதவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் உபயோகத்திற்கு சிறந்ததாக இருக்கும்.