Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவிலேயே முதல்முறையாக மீடியாடெக் 7050 ப்ராசஸர்! – வெளியானது Lava Agni 2 5G!

Lava Agni 2
, செவ்வாய், 16 மே 2023 (16:23 IST)
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா தனது புதிய Lava Agni 2 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குறைந்த விலையில் பல மாடல் ஸ்மார்ட்போன்களை லாவா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது பல நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் 5ஜி ரேஸில் லாவாவும் இணைந்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக Mediatek Dimensity 7050 சிப்செட்டை கொண்ட Lava Agni 2 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை லாவா அறிமுகப்படுத்தியுள்ளது.

Lava Agni 2 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட்,
  • ஆக்டாகோர் ப்ராசஸர்
  • 6.78 இன்ச் அமொலெட் கர்வ்ட் டிஸ்ப்ளே
  • 50 எம்.பி (வைட் ஆங்கிள்) + 8 எம்.பி (அல்ட்ரா வைட்)+ 2 எம்.பி (மேக்ரோ) + 2 எம்.பி (டெப்த் சென்சார்) குவாட் கேமரா,
  • 16 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 4700 mAh பேட்டரி, 66W பாஸ்ட் சார்ஜிங்,
  • ஆண்ட்ராய்டு 13, மாலி ஜி68
இந்த Lava Agni 2 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தளங்களில் கிரெடிட்/டெபிட் கார்டுகளை பொறுத்து சலுகை விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்த 2 கல்லூரி மாணவர்கள் கைது